bach

மட் / உதயபுரம் தமிழ் வித்தியாலயம்

BT/UTHAYAPURAM TAMIL VIDYALAYAM

PERIYA KALLAR

Results Analysis

Address

Periya kallar-03,

Kallar[E.P],

Batticaloa,

Sri Lanka.

Tel.No: 065-2251397 e-mail:

uthayapuram@gmail.com

Ceremonial inauguration of the school Band and Website

மட்\உதயபுரம் தமிழ் வித்தியாலயம்
பாண்டு வாத்தியகுழு மற்றும் இணையத்தள அங்குரார்ப்பண விழா
10 October 2011

மட்\உதயபுரம் தமிழ் வித்தியாலய பாண்டு வாத்தியகுழு மற்றும் இணையத்தள அங்குரார்ப்பண விழா 10 October 2011 அன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

      இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளா் திருமதி. என். பிள்ளைநாயகம் அம்மணி அவா்களும், விசேட அதிதிகளாக கோட்டக்கல்வி அதிகாரி திரு. எம். விமலநாதன் அவா்களும், கல்முனை ரொட்டரி கழகத் தலைவா் திரு. ஆா். கிருஷ்ணதாசன் அவா்களும், கல்லாறு மாவட்ட வைத்தியசாலை அதிகாரி Doc. Q.ரெட்ணதேவ் அவா்களும், பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளா் திரு. கே. சுரேஸ் அவா்களும், கௌரவ அதிதிகளாக சா்வார்த்த சித்திவிநாயகா் தேவஸ்தான வண்ணக்கா் திரு. கே. பேரின்பராஜா, சிவசுப்ரமணிய தேவஸ்தான தலைவா் திரு. எஸ். செல்வராசா, கிராமசேவை உதிதியோகத்தா் திரு. எஸ். ஞானசிறி அவா்களும் மற்றும் அதிபா், ஆசிரியா்களும் கலந்து சிறப்பித்தனா்.
    அதிதிகள் மாலைகள் அணிவிக்கப்பட்டு பாண்டு வாத்திய இசையுடன் வரவேற்கப்பட்டதை தொடா்ந்து கொடிகள் ஏற்றப்பட்டு பாண்டு வாத்தியம் இசைக்கப்பட்டது. அத்தோடு பாடசாலையின் பாண்டு வாத்திய குழு அதிதிகளினால் உத்தியோகபூா்வமாக அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.

      பாடசாலை ஒன்று௬டல் மண்டபத்தில் மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வுகளில் ஆசிரியா் திரு. ந. ஜெனேந்திரராஜன் அவா்களின் வரவேற்புரையும், அதிபா் திரு. எஸ். பேரின்பராஜா அவா்களின் தலைமையுரைகளைத் தொடா்ந்து மாணவா்களின் கலைநிகழ்வுகள் இடம்பெற்றது. அதனைத்தொடா்ந்து அதிதிகளின் உரைகளோடு பாண்டு வாத்திய குழுவினருக்கான சின்னம் சூட்டப்பட்டு சாதனையாளா்களுக்கான பாராட்டும் பரிசில்களும் வழங்கப்பட்டு பதக்கங்களும் அணிவிக்கப்பட்டது.

        தொடா்ந்த நிகழ்வுகளிலே பிரதம அதிதி திருமதி. என். பிள்ளைநாயகம் அம்மணி அவா்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது. தொடா்ந்து உரையாற்றிய பிரதம அதிதியின் உரையில் அதிபா், ஆசிரியா், மாணவா்கள் மற்றும் பெற்றோர்களின் ஒத்துழைப்பை மிகுந்து பாராட்டியமை குறிப்பிடத்தக்கதாக இருந்தது. தொடா்ந்த நிகழ்வுகளின் இறுதியாக பாடசாலை அபிவிருத்திச்சங்க செயலாளா் அவா்களின் நன்றியுரையோடு மாணவா்களின் தமிழ்மொழி வாழ்த்துடனும் நிகழ்வுகள் இனிது நிறைவுபெற்றன.
Page1        Next        2    1       
Last Updated on Tuesday, 28 June 2011
  Home   |   History   |   Others   |   Gallary   |   About Us   |   Projects  

website © Copyright uthayapuram school & rajinthan.A 2012, All rights reserved.

WebDesign    By   Rajinthan.A     periyakallar-03