bach

மட் / உதயபுரம் தமிழ் வித்தியாலயம்

BT/UTHAYAPURAM TAMIL VIDYALAYAM

PERIYAKALLAR

Results Analysis

Address

Periya kallar-03,

Kallar[E.P],

Batticaloa,

Sri Lanka.

Tel.No: 065-2251397 e-mail:

uthayapuram@gmail.com

உதயபுரம் தமிழ் வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி 2014.02.24

உதயபுரம் தமிழ் வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி 2014.02.24 திங்களன்று பிற்பகல் வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் அதிபர் எஸ்.பேரின்பராஜா தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட பட்டிருப்பு வலய கல்விப் பணிப்பாளர் திருமதி ந.புள்ளநாயகம் சம்பிரதாயபூர்வமாக விளையாட்டுப் போட்டியையும் வாண்ட வாத்திய முதலாவது நிகழ்வையும் ஆரம்பித்து வைத்தார்.

இந் நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கோட்டக் கல்விப் பணிப்பாளர் பூ.பாலச்சந்திரன், மாவட்ட வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ருதேசன், பாடசாலை அபிவிருத்திச் செயலாளர் கே.சுரேஸ், ஆர்.ஜி உரிமையாளர் கே.சுதர்சன், ஆகியோரும், கௌரவ விருந்தினர்களாக சர்வார்த்த சித்திவிநாயகர் ஆலய தலைவர் க.சீவரெத்தினம், கிராம சேவை உத்தியோகத்தர் எஸ்.ஞானசிறி, பழைய மாணவர் சங்க செயலாளர் எம்.சிவகுமாரும் கலந்த கொண்டு சிறப்பித்தனர்.

இப்போட்டியில் ஜமுனா இல்லம் முதலாம் இடத்தையும், கங்கா இல்லம் இரண்டாம் இடத்தையும் காவேரி இல்லம் மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டன. இல்ல அலங்கரிப்பில் காவேரி இல்லம் (மஞ்சள்), ஜமுனா இல்லம் (பச்சை) , கங்கா இல்லம்(நீலம்) ஆகியவை முறையே 1ம், 2ம், 3ம் இடங்களைப் பெற்றுக் கொண்டன. உடற் பயிற்சிக் கண்காட்சி அனைவரினதும் கவனத்தை ஈர்த்தது.

பாடசாலை அதிபர் தனதுரையில் பாடசாலை இணைப்பாட விதானங்களிலும் சாதனைகள் புரிந்து வருவதாகவும், இப்பாடசாலையின் விளையாட்டுத் துறையை மேலும் மேம்படுத்த இந்த விளையாட்டு மைதானம் சீர் செய்யப்பட வேண்டியதின் அவசியத்தை எடுத்துரைத்தார்.

கோட்டக் கல்விப் பணிப்பாளர் தனதுரையில் இவரது வழக்கமான பாணியில் இமயத்தில் ஏறும் கதையொன்றை மாணவர்கள் மனதில் பதியும்படி கூறி மாணவர்களின் சிந்தனையை தூண்டி விட்டார்.. அத்துடன் உயிர் இருந்தால் மட்டும் போதாது அதில் உயிர்ப்பு இருக்க வேண்டும். அத்தகைய உயிர்;ப்புள்ள ஒரு பாடசாலையாக இப் பாடசாலையை தான் அடையாளம் கண்டள்ளதாகவும் பாராட்டுத் தெரிவித்தார். இந்தியாவில் ஓடும் நதிகளான கங்கா, ஜமுனா, காவேரி நதிகள் மூன்றுமே ஒரே திசை நோக்கிச் செல்பவை. அதே போல் இந்த விளையாட்டு வீரர்களும் ஒற்றுமை என்ற இலக்கை அடைந்து அனைத்திலும் வெற்றியடைய முயற்சிக்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.

புpரதம அதிதியான பட்டிருப்பு வலய கல்விப் பணிப்பாளர் தனதுரையில், பெற்றோர் இணைப்பாட விதானங்களில் அக்கறை காட்டுவது குறைவு. இதனால் மாணவர்களும் பங்கபற்றுவதும் குறைவு. ஆனால் ஆளுமையுள்ள எதிர்கால சந்ததியை பாடசாலைகள் உருவாக்குவதற்கு இணைப்பாட விதானங்களும் முக்கியமாகும். அனுபவ ரீதியாகப் பார்க்கும் போது தலைமை தாங்குபவர்களின் பின்னணியைப் பார்த்தால் அவர்கள் இணைப் பாடவிதானங்களிலும் சாதித்தவர்களாகவே காணப்படுவார்கள்.

எதிர்கால சவால்களுக்கு முகம் கொடுக்கக்கூடிய பக்குவத்தையும் மனப்பாங்கையும் ஏற்படுத்திக் கொடுக்கும் சக்தி விளையாட்டுத்துறைக்கு உண்டு. எனவே இந்த பாடசாலையின் விளையாட்டு மைதானத்தை சீர் செய்வதற்கு எமது திணைக்களம் சிறு நிதி ஒதுக்கிக் கொடுக்கும் என்றும் தெரிவித்தார்.

இந் நிகழ்வில் பிரதம அதிதி, கோட்டக்கல்விப் பணிப்பாளர் ஆகியோருக்கு நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. அத்துடன் பாண்ட்வாத்தியம் பழக்குவதில் நன்கு தேர்ச்சி பெற்று பட்டிருப்பு கல்வி வலயத்திலும் மட்டுமல்லாது, ஏனைய மாவட்டத்திலுள்ள கல்வி வலயங்களிலும் இத் துறைக்கு பாரிய பங்களிப்புச் செய்து போட்டிகளில் பாடசாலைகள் வெற்றி பெறுவதற்கும் பங்களிப்புச் செய்து பயிற்றுனராகச் செயற்பட்டுவரும் பெரியகல்லாற்றைச் சேர்ந்த நடேசன். தனுசாந் இப்பாடசாலையிலும் பயிற்றுனராக கடமையாற்றியதற்றாக விசேட பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டார்









































































மூலம் Battinews


செய்யத் தெரிந்தவன் சாதிக்கிறான்
செயலை அறிந்தவன் போதிக்கிறான்
செய்யமுடியாதவன் குற்றம் காண்கிறான்
- ஜோர்ச் போ்னாட்சா

MOTTO - மகுட வாசகம்

Understanding Through Learning.
கற்று உணா்.

VISION - தொலைநோக்கு

Promoting Social welfare by Promoting an individual's welfare.
தனி மனித விருத்தியினூடாக சமூக விருத்தியை ஏற்படுத்தல்.

MISSON - பணிக்௬ற்று

Developing the abilites an individual to face Socio-Economic Problems be might have to overcome in future through the School Curriculum.
பாடசாலையை கலைத்திட்டத்தினுடாக எதிர்கால சவால்களுக்கும், சமூகப் பிரச்சினகை்கும் முகம் கொடுக்கக்௬டிய தனியாள் விருத்தியை ஏற்படுத்தல்.
  Home   |   History   |   Others   |   Gallary   |   About Us   |   Projects  

website © Copyright uthayapuram school & rajinthan.A 2012, All rights reserved.

WebDesign    By   Rajinthan.A     periyakallar-03